Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தி.மு.க முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் மரணம்!

தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் (68) சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.10 மணி அளவில் காலமானார்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் திருவான்மியூரில் உள்ள மகள் வீட்டில் இருந்தவாறு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால், பலனின்றி மாலையில் அவர் காலமானார்.

முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் கடந்த 1977-ம் ஆண்டுக்கு முன்பு அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 77-ம் ஆண்டு சமயநல்லூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1980-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். 84-ம் ஆண்டு சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 1996-ம் ஆண்டு சமயநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த 2001-ம் ஆண்டு மேலூர் பொது தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post