Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு விவகாரம்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!


சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சில கட்சிகள் வற்புறுத்தி வரும் நிலையில், கடந்த 22-ந் தேதி பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. 

இந்த பிரச்சினை தொடர்பாக முதல் நாளிலேயே, மத்திய அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வரிந்து கட்டியது. ஆனால் போதிய ஆதரவு இல்லாததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் 184-வது விதியின் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்பது பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகளின் கோரிக்கை.

பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல் நாள் சபாநாயகர் மீராகுமார் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். என்றாலும் அமளி காரணமாக கூட்டத்தொடரின் முதல் 2 நாட்களும் முடங்கின. இதனால் மத்திய அரசு இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post