Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று தொடங்குகிறது குளிர்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் சுமூகமாக நடக்குமா?

சுமூகமாக நடக்குமா?
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 20-ந் தேதி கூட்டத்தொடர் முடிவடைகிறது. இதில், 20 அமர்வுகள் நடைபெறும். 25 மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. 

லோக்பால்-லோக் ஆயுக்தா மசோதா, பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதா, ஊழல் பற்றி தகவல் கொடுப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் மசோதா, இன்சூரன்சு துறையில் அன்னிய முதலீட்டை உயர்த்தும் மசோதா, வங்கிகள் சட்ட திருத்த மசோதா, கம்பெனி மசோதா, ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணைய மசோதா ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். 

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அந்த விவகாரம் குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. ஆனால், விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருந்தபோதிலும், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு தயாராக இல்லை. எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டால், அவை ஒத்தி வைக்கப்படும். கடந்த முறை நடந்த கூட்டத்தின் போது, எதிரக்கட்சிகளின் அமளியால், அவை தொடர்ந்து நாட்கணக்கில் ஒத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


[vuukle-powerbar-top]

Recent Post