Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு!

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா தன் கட்சி எம்.பி.க்களை சனிக்கிழமை கொல்கத்தாவில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற விதி 184 அல்லது 193 ஆகியவற்றின் கீழ் நோட்டீஸ் அளிப்பதற்குப் பதிலாக, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய, குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இத்தீர்மானத்தைக் கொண்டுவருவார். இதை ஆதரிக்கும்படி மற்ற அரசியல் கட்சிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களின் முன்னாள் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவைக் கோருவோமா? என்று கேட்கிறீர்கள். எங்களுடன் யார் பேச விரும்பினாலும் அவர்களுடன் பேச நாங்கள் தயார். அரசியல் கட்சிகள் எந்தக் கட்சியுடனும் பேசலாம். இதில் எந்த மத விவகாரமும் சம்பந்தப்படவில்லை. இது மதப் பிரச்னையோ, கூட்டணிப் பிரச்னையோ இல்லை. இது ஊழல் சம்பந்தப்பட்ட விஷயம். நாங்கள் அனைவரும் பிரச்னையைக் கூட்டாகச் சமாளிக்க ஒன்றிணைந்துள்ளோம்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு மாநிலக் கட்சிகளும் ஆதரவு தரவேண்டும் என்றார் மம்தா.
[vuukle-powerbar-top]

Recent Post