Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஒபாமாவின் முத்தம்

மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டின் ஜனநாயக ஆர்வலரான ஆங் சான் சூ கிக்கு வழங்கிய முத்தமானது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சர்வாதிகார ஆட்சியிலிருந்து தற்போது சிறிது சிறிதாக ஜனநாயக நீரோட்டத்தினுள் நுழைந்து வரும் மியன்மாருக்கு ஒபாமா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன் ஓர் அங்கமாக ஆங் சான் சூ கி 15 வருடங்களாக காவலில் வைக்கப்பட்டிருந்த அவரின் வீட்டுக்கு ஒபாமா விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இங்கு உரையாற்றிய ஒபாமா அந்நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

மேலும் அவரது விஜயத்தின் முக்கியமாக அமைந்தது ஆங் சான் சூ கிக்கு ஒபாமா வழங்கிய முத்தமாகும்.

தனது நட்பின் அடையாளமாக ஒபாமா வழங்கியதாக கருதப்படும் இம்முத்தமானது சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தமானது ஊடகங்கள் முன்னிலையில் வழங்கப்பட்டமையானது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஆசிய நாடுகளில் அதுவும் மியன்மார் போன்றதொரு நாட்டில், ஆங் சான் சூ கி போன்ற வரலாற்றுப் பெண்ணுக்கு முத்தமிடப்பட்ட சம்பவமானது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

இதே போல 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நெல்சன் மண்டேலா இந்திய நடிகை சபான ஆஷ்மிக்கு முத்தம் வழங்கிய சம்பவமும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.
பொது இடத்தில் தனது மனைவிக்கு முத்தம் வழங்கி ஊடகங்களை தன்பக்கம் ஈர்த்திருந்தவர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post