Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாகிஸ்தானில் இன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல்

பாகிஸ்தானில் இன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். வர்த்தக நகரமான கராச்சியில் துணை ராணுவப் படை தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

இன்று காலை வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தில் வந்த தீவிரவாதி, துணை ராணுவப் படை தலைமை அலுவலகம் மீது வேகமாக மோதினான்.

இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 14 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதியின் தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்புப் படை தலைமை அலுவலகத்தின் ஒரு பகுதி கட்டடம் இடிந்து விழுந்தது.

அருகிலுள்ள கட்டடங்களும் சேதத்தை சந்தித்தன. இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள கராச்சி காவல்துறையினர், காய்கறி லாரியில் 100 கிலோ வெடிபொருட்களை நிரப்பி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post