Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வடக்கு ஜப்பானில் 5.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

வடக்கு ஜப்பானில் இன்று ஜப்பான் நேரப்படி மதியம் 12.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கமானது இபறாகி எனும் இடத்தில் 4 தடவைகளும் புகுஷிமா, சைடமா, டோசிகி ஆகிய இடங்களில் 3 தடவைகளும் ஏற்பட்டிருப்பதாக டோக்யோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நிலநடுக்கமானது புகுஷிமா கடற்கரையில் இருந்து 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் டோக்யோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் இதுவரை இல்லை.
[vuukle-powerbar-top]

Recent Post