Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

21 குண்டுகள் முழங்க பால் தாக்கரேவின் உடல் தகனம்: 20 லட்சம் பேர் அஞ்சலி!

தாக்கரேவின் கடைசிப் பயணம்!
நேற்று காலமான சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு 10 மணி நேரத்துக்கும் மேலாக இறுதி ஊர்வலம் நடைபெற்றது.  அதன் பின்னர் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. 

உடல்நலக் குறைவால் காலமான பால்தாக்கரேவின் உடல் இன்று காலை அவரது இல்லத்திலிருந்து சிவாஜி பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது இல்லத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவாஜிபூங்கா வரை சாலை முழுவதும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். சுமார் 20 லட்சம் பேர் பால்தாக்கரேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டிருந்தனர். இதனால் மாலை 5 மணிக்குத்தான் சிவாஜிபூங்காவை அடைய முடிந்தது. வழியில் சிவசேனாவின் தலைமையகமான சேனா பவனில் சிறிது நேரம் பால்தாக்கரேவின் உடல் வைக்கப்பட்டது

பின்னர் சிவாஜி பூங்காவில் மாலை 6 மணி அளவில் முழுமையான அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க பால்தாக்கரேவின் உடல் தகனம் செய்யப்பட்டது.


[vuukle-powerbar-top]

Recent Post