Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தேனியில் பட்டப்பகலில் பரபரப்பு கல்லூரி மாணவியிடம் தங்க சங்கிலி பறிப்பு

தேனியில் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த கல்லூரி மாணவி கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி பாரஸ்ட் ரோடு 2–வது தெருவை சேர்ந்த முத்துவேல். இவருடைய என்பவரின் மகள் காயத்ரி (வயது 21). இவர் பெரியகுளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். இறுதி யாண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை என்பதால் தேனியில் உள்ள தனது வீட்டில் காயத்ரி இருந்தார்.

நேற்று பகலில் வீட்டில் இருந்த மாணவி காயத்ரி, வீட்டிற்கு வெளியே உள்ள குடிநீர் மோட்டாரை இயக்கு வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். மோட்டார் சுவிட்சை போட்டபோது, பின்னால் வந்த 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், காயத்ரி கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்து விட்டு தப்பி ஓடி உள்ளார்.

உடனே காயத்ரி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை விரட்டிச் சென்றனர். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தேனி போலீஸ் நிலையத்தில் காயத்ரி புகார் செய்தார். புகாரின் பேரில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, சப்–இன்ஸ் பெக்டர் தங்கராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்.

கல்லூரி மாணவியிடம் பட்டப்பகலில் நடந்த இந்த நகை பறிப்பு சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post