Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"யோவான் அத்தியாயம் ஓன்று" படத்தில் நடிக்கவிருக்கும் மகேஷ் பாபு.


தெலுகு பட உலகில் மின்னும் நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபுவின் தெலுகு படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மிக பெரிய வெற்றியை கண்டதுண்டு.அவருடைய படங்களுக்கு தமிழ் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் உண்டு.

 இவ்வாறு தமிழ் இரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென வைத்திருக்கும் மகேஷ் பாபு தன் தமிழ் இரசிகர்களை குஷிப்படுத்த நேரடியான ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.சென்னையில் வளர்ந்த இவருக்கு தமிழ் சரளமாக பேச முடியும், இதனால் தன் சொந்த குரலிலேயே இப்படத்தில் பேசவுள்ளார் மகேஷ் பாபு.

"வானம்" படத்தை இயக்கிய கிரீஸ் இயக்கவுள்ள இப்படத்தை அஷ்வினி  தத் தயாரிக்கவுள்ளார்.இதற்கிடையே மேலும் ஒரு தகவலாக கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள "யோவான் அத்தியாயம் ஓன்று" படத்திலும் மகேஷ் பாபுவே நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ் தெலுகு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது "யோவான் அத்தியாயம் ஓன்று".

[vuukle-powerbar-top]

Recent Post