Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இரவு நேர பேருந்து இயக்கம் கோயம்பேட்டில் குறைவு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் இரவு நேரங்களில் குறைவாவே இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருப்பதால், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று மட்டும் 600க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது. பகல் பொழுதில் அதிகளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இரவு நேரத்தைப் பொறுத்தவரை நேரம் செல்லச் செல்ல பேருந்துகள் இயக்கப்படுவது குறைக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் கூட, அவை காலையில்தான் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இதனால், பேருந்து கிடைக்காத நிலையில், நூற்றுக்கணக்கான பயணிகள் பேருந்து நிலையத்திலேயே உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post