Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே அமைதி நிலவ பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நடைபெறும் போரை நிறுத்த இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. 

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவது கவலை அளிப்பதாக இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்ஃபரூதின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் குறித்து இந்தியா கவலை கொள்கிறது.இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் போர் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.இருதரப்பும் தாமதமின்றி நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். 

இந்தியா தலைமையில் கடந்த 14-ந் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்த வலியுறுத்தப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக இந்தியா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களாக காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 55 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தளபதி ஜபாரியும் உயிரிழந்தார். ஹமாஸ் இயக்கத்தின் தலைமையகமும் ஆதரவு தொலைக்காட்சி நிலையமும் நிர்மூலமானது.
[vuukle-powerbar-top]

Recent Post