Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வடக்கில் உச்சிதனைமுகர்ந்தால் படம் பாக்க தடை!


தமிழகத்தின் தொலைக்காட்சி ஒன்று நேற்று உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை ஒளிபரப்பியது இதனை யாழ்ப்பாணத்தில் கேபிள் தொலைக்காட்சி சேவையினர் தடைசெய்துள்ளதாக இலங்கை மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
நேற்று உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் ஒளிபரப்பட்ட நேரத்தில் யாழ்ப்பாணத்தில் கேபிள் தொலைக்காட்சி சேவையை வழங்கும் 'ஆஸ்க் நெற்வேக்' நிறுவனம் தடை செய்து 'நாடோடி' படத்தை ஒளிபரப்புச் செய்தது.

ஈழத்தமிழர்களை மையப்படுத்தி 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படம் தயாரிக்கப்பட்டு அண்மையில் வெளிவந்தது. இந்தப் படத்தைதமிழகத்தில் இருந்து ஒளிபரப்பும் முதன்தை தொலைக்காட்சி நிறுவனம் நேற்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்போவதாக விளம்பரப்படுத்தி இருந்தது.
இதனை எதிர்பார்த்து தமது வீடுகளில் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். 'நாடோடி' படம் ஒளிபரப்பானதால் ஏமாற்றமடைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post