Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"சத்தியமா நீ எனக்கு தேவையில்ல" தனுஷின் இன்னுமோர் கொலவெறி பாடல்.


"கொலவெறி" பாடல் வெளியாகி ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையில் "கொலவெறி" பாடலுக்கு இணையான இன்னுமொரு பாடலை எழுதியுள்ளார் தனுஷ்.

அண்மையில் "கொலவெறி" பாடலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை கொண்டாடியிருந்த தனுஷிடம் "எதிர் நீச்சல்" படத்தின் இயக்குனர் செந்தில் 40 நிமிடங்களில் இப்படத்திற்காக இரண்டு பாடல்களை எழுதித் தரும்படி கேட்டுள்ளார் . இதற்கு சம்மதித்த தனுஷ் "சத்தியமா நீ எனக்கு தேவையில்ல " என்று தொடங்கும் ஒரு பாடலை எழுதிக்கொடுத்துள்ளார்.

இப்பாடல் நிச்சயம் "கொலவெறி" பாடலுக்கு இணையாக பேசப்படும் என உறுதியாக சொல்லியுள்ளார் செந்தில்."எதிர் நீச்சல்" படத்தில் சிவ கார்த்திகேயனுடன் பிரியா ஆனந்த்  ஜோடியாக நடித்துக்கொண்டுள்ளார்.இப்படத்தில் இவர்கள் இருவரது ஜோடிப் பொருத்தமும் மிக பிரமாதமாக வந்திருப்பதாக தெரிவித்துள்ள இயக்குனர் செந்தில்,அனிருத்தின் இசை இல்லைஎன்றால் இப்படம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post