Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக இளைஞர் முன்னணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் (படங்கள்)
தமிழக இளைஞர் முன்னணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் 


குடந்தையில் 17.11.2012 அன்று நடைபெற்ற மாபெரும் மாநாடு.  தமிழக இளைஞர் முன்னணி - ஆறாவது தமிழக மாநாட்டில் கீழ்வரும் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம்..!

தீர்மானம் எண் 1:

தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்குநீதி விசாரணை வேண்டும்.

தர்மபுரி நாயக்கன் கொட்டையில்தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளவரசனும்வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திவ்யாவும்காதலித்து முறைப்படி திருமணம செய்து கொண்டதை எதிர்த்துதாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் நத்தம்அண்ணா நகர்கொண்டம்பட்டி பகுதிகளில் 07.11.2012 அன்று மாலை சாதி ஆதிக்க வெறியர்கள் நடத்திய அட்டூழியத் தாக்குதலால் சற்றொப்ப 200க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளும்உடைமைகளையும் சேதமாகியுள்ளன.

சொத்துகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குடும்ப ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன. சாதி ஆதிக்க வெறியர்களின் இந்த அட்டூழியமான நடவடிக்கையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. சாதி மோதலுக்கான அறிகுறிகள் தெரிந்தும் கூடஅங்கு காவல்படையை அதிகரிக்காமல் அலட்சியமாக இருந்த தமிழகக் காவல்துறையினருக்கு இம்மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.

தர்மபுரி தீ வைப்பு மற்றும் கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபட்ட அனைவரையும்வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். முழுமையாகவும்,பாதியாகவும் பாதிப்பு அடைந்த வீடுகளுக்கு பாரபட்சம் காட்டாமல்அனைத்து வீடுகளுக்கும் மாற்றாக புதிய வீடுகளை தமிழக அரசு கட்டித் தர வேண்டும். அத்துடன் அவர்களுக்கு உடனடியாக அவர்கள் குடும்பம் நடத்துவதற்குப் பொருட்கள் வாங்க நிதி உதவி வழங்க வேண்டும்.
பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில்விசாரணை ஆணையம் அமைத்து தர்மபுரி தீ வைப்பு நிகழ்வுகள் குறித்து விசாரிக்க வேண்டுமென இம்மாநாடுக் கேட்டுக் கொள்கின்றது.

தமிழர்கள் அனைவரும் சாதி கடந்து ஒற்றுமையாய் நின்றுநம் உரிமைகளை மீட்பதற்குப் போராடுவதற்கு மாறாகசாதியின் அடிப்படையில் தங்களுக்குள் அழிவுகளை உண்டாக்கிக் கொள்வதுதன்னழிவுப் பாதையாகும். மனிதர்கள் அனைவரும் சமம்தமிழர்கள் அனைவரும் சமம் என்ற அறம் சார்ந்த கொள்கையான தமிழ்த்தேசியம்தான் சாதிப் பிளவுகளை முறியடிக்கும் மருந்தாகும். இதனை உணர்ந்துதமிழர்கள் சாதிப் பெருமிதத்தை எந்த வடிவிலும் ஏற்றுக் கொள்ளாது அறுவருத்து ஒதுக்க உறுதியேற்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண் 2:

பரமக்குடி – மதுரை படுகொலைகள் – குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்க

ஈகி இமானுவேல் சேகரன் (செப்டம்பர் 11) நினைவு நாளும்முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளும் (அக்டோபர் 30) ஒவ்வொரு ஆண்டும் பதற்றத்தோடுதான் நடக்கின்றன. சில ஆண்டுகளில் படுகொலைகளும் சேர்ந்து கொள்கின்றன.

கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாளில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 6 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பழனிக்குமார் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவன் மேல்சாதி வெறியர்களால் கொல்லப்பட்டான்.
இவ்வாண்டுமுத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளை ஒட்டித் தேவர் வகுப்பினர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
பரமக்குடிப் பகுதியில் காவல்துறை வகுத்துக் கொடுத்த பாதையைத் தாண்டி வேறு பாதையில் சென்ற மூவர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

ஒரு டாட்டா சுமோ ஊர்தியில் பசும்பொன் சென்று திரும்பியவர்கள் மீது தேவேந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை அருகேபெட்ரோல் குண்டு வீசினர். அதில்படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரில் இதுவரை ஆறு பேர் இறந்துபோயினர். இவை அனைத்தும் கொடுமையான பச்சைப் படுகொலைகள் ஆகும். கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
தலைவர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்ற பெயரில் இருவகுப்பினரும் தங்கள் தங்கள் சாதி வலிமையைக் காட்டிக் கொள்ளவே முனைகின்றனர். இவ்விரு தலைவர்களின் நினைவு நாளுக்கு அங்கு செல்லும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அந்தந்த சாதி வாக்குகளைப் பெறும் நோக்கத்திலேயே செல் கின்றனர். அதனால்தான்அண்ணாபெரியார்காமராசர் நினைவிடங்களைவிட மேற்கண்ட இருவரின் நினைவிடங்கள் புகழ்” பெற்று விளங்குகின்றன.
தாங்கள் போற்றும் தலைவர்களை சாதி மோதலுக்குரிய சின்னங்களாக மாற்றுவது அத்தலைவர்களுக்கு செலுத்தும் மரியாதை அன்றுஅவமரியாதை ஆகும்.
தமிழர்கள் அனைவரும் சாதி கடந்து ஒற்றுமையாய் நின்றுநம் உரிமைகளை மீட்பதற்குப் போராடுவதற்கு மாறாகசாதியின் அடிப்படையில் தங்களுக்குள் அழிவுகளை உண்டாக்கிக் கொள்வதுதன்னழிவுப் பாதையாகும். மனிதர்கள் அனைவரும் சமம்தமிழர்கள் அனைவரும் சமம் என்ற அறம் சார்ந்த கொள்கையான தமிழ்த்தேசியம்தான் சாதிப் பிளவுகளை முறியடிக்கும் மருந்தாகும்.
இதனை உணர்ந்துதமிழர்கள் சாதிப் பெருமிதத்தை எந்த வடிவிலும் ஏற்றுக் கொள்ளாது அறுவருத்து ஒதுக்க உறுதியேற்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
பரமக்குடியிலும்மதுரையிலும் கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தீர்மானம் எண் 3:

இனப்படுகொலைக் குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துக! தமிழீழம் குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்துக !

2009 ஏப்ரல் – மே மாதங்களில்சற்றொப்ப 1,40,000க்கும் மேற்பட்ட தமிழீழத் தமிழர்களைஇந்தியாவின் துணையுடன் சிங்களப் படைகள் இனப்படுகொலை செய்தன. அப்போருக்குக் காரணமான சிங்கள அதிபர் இராசபக்சே தலைமையிலான இனப்படுகொலைக் குற்றக்கும்பலை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்திஇனப்படுகொலைக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும் என ஐ.நா. மன்றத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஒரு பக்கச் சார்பாக செயல்பட்ட ஐ.நா. மன்றம்தனது போக்கைத் திருத்திக் கொள்ள வேண்டும். தமிழீழம் குறித்துஈழத்தமிழர்களிடையே உலக நாடுகள் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்திமுடிவு செய்ய வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
தமிழக அரசுஇலங்கை மீதான பொருளியல் தடைக்கு செயல்வடிவம் கொடுக்கவும்தமிழ்நாட்டில் தங்குதடையின்றி நுழையும் சிங்களர்களுக்குத் தடைவிதிக்கவும் முன்வர வேண்டும். மேலும்சிறப்பு முகாம் என்ற பெயரில் தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டுள்ள வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழீழத் தமிழர்களைதிறந்தவெளி அகதிகள் முகாமிற்கு மாற்றிசிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் எண் 4:

தமிழக மின்சாரம் தமிழ்நாட்டிற்கே!

தமிழகத்தின் சிறுதொழில்களும்சுயதொழில்களும்முற்றிலும் நசிந்து போகும் வகையிலும்மக்களின் அன்றாட வாழ்க்கையை நிலைகுலையச் செய்யும் வகையிலும் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்ற மின்வெட்டை நிரந்தரமாகப் போக்க தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.
தமிழகத்திலிருந்து உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரத்தைதமிழகத்திற்கே முழுமையாகப் பெற்றும்பன்னாட்டு - வடநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் தங்குதடையற்ற மின்சாரத்தை நிறுத்தியும்தரமற்றக் கம்பிகளால் விரையமாகும் மின்சாரத்தை முறையாக சேமித்தும் தமிழக மின்வெட்டை உடனடியாகப் போக்க வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

வெளியாரை வெளியேற்றுக!

1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் தமிழ்நாடு மொழிவழித் தாயகமாக உருவாக்கப்பட்ட பின் தமிழகத்தில் குடியேறிதமிழகத்தின் தொழில்வணிகம்வேலை வாய்ப்புகளைக் கைப்பற்றி ஆதிக்கம் புரிந்து வரும்மார்வாடிகுசராத்தி சேட்டுகளையும்தமிழகத்தில் மிகை எண்ணிக்கையில் குடியேறியுள்ள இந்திக்காரர்கள்,பீகாரிகள்மலையாளிகள்வங்காளிகள் உள்ளிட்ட அயல் இனத்தார் அனைவரையும் தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டுமென இம்மாநாடு ஒருமனதாகக் கோருகிறது.
ஏற்கெனவேகுற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டுள்ள தமிழகத்தில்வந்தேறிகளாகக் குடியேறியுள்ள அயல் இனத்தாரால் கொலைகொள்ளைபாலியல் குற்றச் செயல்கள் என மேலும் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டதை கவனத்தில் கொண்டுதமிழக அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டைக் கலப்பினத் தாயகமாக உருமாற்றிதமிழர் தாயகத்தை சிதைக்கும் வன்ம நோக்குடன் இந்திய அரசு இது போன்ற குடியேற்றங்களை ஊக்குவிப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாட்டில் நுழையும் வெளி மாநிலத்தவர்க்குவாக்காளர் அட்டையும்குடும்ப அட்டையும் கொடுக்கக் கூடாதென தமிழக அரசை இம்மாநாடு கோருகின்றது.
இக்கோரிக்கையை வலியுறுத்திவரும் திசம்பர் மாதம் தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் பரப்புரை  நடத்துவதென இம்மாநாடு ஒருமனதாக முடிவு செய்கின்றது. இப்போராட்டத்திற்குதமிழர்கள் அனைவரும் கட்சி கடந்து ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் எண் 6:

ஆற்று நீர் உரிமைகளைப் பாதுகாப்போம்!

இந்திய அரசின்உலகமயப் பொருளியல் கொள்கைகளின் விளைவாலும்பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கங்களாலும் சூறையாடப்பட்ட தமிழக வேளாண்மை,காவிரிமுல்லைப் பெரியாறுபாலாறு என நீர் ஆதாரங்களை தொடர்ந்து மறுத்து வரும் அண்டை மாநிலங்களின் தாக்குதலால் மேலும் நிலைகுலைந்து போயுள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட முல்லைப் பெரியாறு அணை மீது தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை மறுக்கும் கேரளாவையும்காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் கர்நாடகாவையும் இந்திய அரசு கண்டிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அழுத்தமும் கொடுக்கவில்லை.
எனவேதொடர்ந்து நீடித்து வரும் இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிராகதமிழக உழவர்களும்வணிகர்களும் அணிதிரண்டு போராட முன்வர வேண்டுமென இம்மாநாடு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண் 7:

தமிழ்வழிக் கல்வியில் பயின்றோருக்கு உயர்கல்வி - வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டும்!

தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கும்இளைஞர்களுக்கும்உயர்கல்வியிலும்வேலை வாய்ப்பிலும் அவர்களது எண்ணிக்கை விகிதத்துக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் சமூக நீதி அடிப்படையில்இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி வேலைகள் வழங்குமாறுச் செய்யதமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக இந்திய அரசு அறிவிக்க வேண்டுமனவும்இளைஞர்களுக்குவேலை இல்லாதக் காலத்துக்கு அதற்கேற்ற வாழ்வூதியத்தை அளிக்க தமிழக அரசு முன் வரவேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8:

அணுஉலைகளை இழுத்து மூடுக!

அணுக்கதிர் வீச்சு அபாயமிக்க அணுஉலைகள உலகின் முன்னணி நாடுகள் பலவும் மூடி வரும் நிலையில்இந்திய அரசு புதிய அணுஉலைகளைத் திறந்து நாட்டை சுடுகாடாக்க முயன்று வருகின்றது.
தமிழர் உயிருக்கு உலை வைக்கும் வகையில்இந்திய அரசால் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுஉலையையும்தேவாரத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆபத்தான நியூட்ரினோ அணுத் தொழிற்சாலையை இந்திய அரசு இழுத்து மூட வேண்டும்.
1988 தொடங்கிஇன்று வரை அணுஉலையை எதிர்த்த வீரியத்துடன் போராடி வரும் கூடங்குளம் – இடிந்தகரை மக்களுடன்தமிழக இளைஞர் முன்னணி கரம் கோத்து நிற்கிறது. அறவழியில் போராடும் மக்களை ஒடுக்கும் வகையில்காவல்படையைக் குவித்தும்தேசத் துரோகம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிந்தும் அச்சுறுத்துகின்ற தமிழக அரசை இம்மாநாடு வன்மையாக்க் கண்டிக்கிறது.
இடிந்தகரையில் போராடிய லுர்துசாமிநசரேன்தவசிக்குமார்சிந்துபாரத் ஆகியோர் மீது காவல்துறையால் ஏவப்பட்டுள்ள குண்டர் சட்ட வழக்கைத் திரும்பப் பெற தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது. மேலும், 55,000க்கும் மேற்பட்ட மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கைவிடவும் இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் எண் 9:

மூவர் தூக்குத் தண்டனையை இரத்து செய்க!

இராசீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டுசாவுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன்முருகன்சாந்தன் ஆகியோரை இந்திய அரசு விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது. பத்தாண்டுகளுக்கும் மேலாகதமிழகச் சிறைகளில் வாடி வரும்இசுலாமியச் சிறைவாசிகளையும்அரசியல் சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாடு ஒருமனதாகக் கோருகிறது.

தீர்மானம் எண் 10:

போதைப் பொருட்களை தடை செய்க!

இளைஞர்களின் ஆளுமைத் திறனை சீரழரித்து அவர்களை போதை அடிமைகளாக வைத்திருக்கும்மதுபான்பராக்மாணிக்சந்த்ஹான்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை போதைப் பொருட்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
அண்மையில் இந்திய அரசு புகையிலை சார்ந்த பொருட்களை உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் அறிவித்துள்ள காரணத்தால்பான்பராக்மாணிக் சந்த்,ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பாக்குகளின் விற்பனையை மாநில அரசுகளே தடை செய்ய முடியும். மத்தியப் பிரதேசம்கேரளாபீகார் ஆகிய மாநிலங்கள் குட்கா வகை பாக்குகளின் விற்பனைக்குத் தடை விதித்துள்ளன.
எனவேதமிழக அரசு பான்பராக்மாணிக் சந்த்உள்ளிட்ட போதைப் பாக்குகளை தடை செய்வதுடன்முழு மதுவிலக்கை அமல்படுத்திமதுவால் சீரழியும் தமிழக இளையோர் சமூகத்தைக் காப்பாற்ற முன்வர வேண்டும்.
வடநாட்டு மார்வாடிகளின் தயாரிப்புகளான பான்பராக்மாணிக்சந்த்ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழக வணிகர்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் எண் 11:

மக்கள் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடுக!

மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் சனநாயகத்தின் பெயரால் ஆட்சியமைத்துள்ள தமிழக முதல்வர் செயலலிதாமாற்றுக் கருத்துகளை முன்வைக்கும் பல்வேறு அமைப்புகள் மீதும்ஊடகங்கள் மீதும் காவல்துறையை விட்டு தடியடி நடத்துவதையும்வழக்குகள் பதிவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளதை இம்மாநாடு கண்டிக்கிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் பயின்ற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி காயத்ரியின் மர்ம மரணத்திற்கு நீதிக்கேட்டுப் போராடிய ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் மீது தடியடி நடத்தியக் காவல்துறைஅவ்வமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் நாகராசுமாவட்டச் செயலாளர் தோழர் தமிழரசு ஆகியோர் மீது குண்டர் சட்டத்தை ஏவியுள்ளது.
குன்றத்தூரில் அமைதியான வழியில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த முன்னாள் நக்சல்பாரி இயக்கத்தினர் 13 பேரை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துக் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.
கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரிசென்னையில் நடைபெற்ற சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் மக்கள் அணிதிரண்டு விடாமல் தடுப்பதற்காக,கடும் தடைகளை ஏற்படுத்தியது தமிழகக் காவல்துறை.
இவ்வாறு பல்வேறு அமைப்பினர் மீதும்மக்கள் மீதும் தமிழகக் காவல்துறை நடத்தும் தாக்குதல்களையும்வழக்குகளையும் கைவிட வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

தீர்மானம் எண் 12:

மொழிப்போர் ஈகி தாளமுத்துவுக்கு மணிமண்டபம்

1938இல் இந்திய அரசால் தமிழகத்தின் மீது இந்தி மொழித் திணிக்கப்பட்ட போதுஅதனை எதிர்த்துக் களம் கண்ட மொழிப் போர் ஈகி தாளமுத்து அவர்களது நினைவைப் போற்றும் வகையில்அவர் பிறந்த ஊரான குடந்தையில் அவருக்கு குடந்தையில் தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

[vuukle-powerbar-top]

Recent Post