Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நாடுகளை குறிவைக்கிறது இலங்கை – இன்று கசகிஸ்தான் செல்கிறார் ராஜபக்ச

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கான ஆதரவு அணியை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, கசகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

இரண்டு நாள் பயணமாக இன்று சிறப்பு விமானத்தில் அவர் கசகிஸ்தான் தலைநகர் அஸ்ரானா செல்கிறார். 

இந்தப் பயணத்தின் போது சுற்றுலா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருதரப்பு ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது. 

கடந்த திங்களன்று நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்சபையில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான உறுப்பு நாடாக கசகிஸ்தான் தெரிவு செய்யப்பட்டது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் மேற்குநாடுகளால் இலங்கைக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதனை முறியடிக்கும் நகர்வுகளை இலங்கை முன்கூட்டியே ஆரம்பித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னர், ஆபிரிக்க நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் மற்றொரு நாடான உகண்டாவின் அதிபர், கடந்தவாரம் கொழும்பு வந்திருந்தபோது, இலங்கை 
அரசாங்கம் 1.5 மில்லியன் டொலர் நன்கொடையை உகண்டாவுக்கு வழங்க முன்வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 
[vuukle-powerbar-top]

Recent Post