Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முகநூலில் பால் தாக்ரேவின் இறுதி ஊர்வலம் குறித்து கருத்து தெரிவித்த பெண் கைது


மும்பையில் மறைந்த பால் தாக்ரேவின் இறுதி ஊர்வலத்தை குறித்து முகநூலில் (பேஸ்  புக் ) 21 வயது பெண் ஒருவர் கேள்வி கேட்டதற்கு அவரை கைது செய்துள்ளது மும்பை காவல்துறை. இன்னொரு பெண் அவரது நிலைத் தகவலுக்கு விருப்பம் தெரிவித்ததால் அந்தப் பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

இரு பெண்களும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 (c) (மதத்தை புண்படுத்தியதாக) மற்றும் பிரிவு 64 (a) (தகவல் தொழில்நுட்ப சட்டம்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகினர். தன்னுடைய நிலைத்தகவலை அந்த பெண் நீக்கியதோடு மன்னிப்பும் கேட்டுள்ளார் எனத் தெரிகிறது. இருந்தும் இரண்டாயிரம் சிவசேனா கட்சியினர் அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவரின் மருந்துவமனையை அடித்து நொறுக்கி உள்ளனர். 

அந்த பெண் முகநூலில் பதிந்த நிலைத் தகவல் வருமாறு: 

 "பால் தாக்ரே போன்ற பலரும் அனுதினமும் பிறந்து இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதற்காக முழு கடை அடைப்பு என்பது தேவையற்றது " என பதிவு செய்திருந்தார்.

சின்மயி விவகாரத்திற்கு பின் சமூக வலைதளங்களில் கருத்துச் சுதந்திரம் இல்லாமல் போய் விட்டது என்று பலரும் புலம்பிய வண்ணம் உள்ளனர். ஆதிக்க சாதியினர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி எளியோர்களை பயமுறுத்த இவ்வாறு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் முக நூலில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கு இந்த பெண்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . மனித உரிமை ஆர்வலர்கள் இது குறித்து விவாதம் செய்வார்கள் எனத் தெரிகிறது. 


[vuukle-powerbar-top]

Recent Post