Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இரண்டாவது நாளாக இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

நேற்றைய விசாரணையின்போது, அணுமின் ஒழுங்குமுறை ஆணையம் அளித்த 17 பரிந்துரைகளில் இன்னும் 11 பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றும், அணுஉலையைச் சுற்றியுள்ள 40 கிராமங்களில் ஒன்றைத் தவிர மற்ற கிராம மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், 40 கிராமங்களையும் தனித்தனி பகுதிகளாக பிரித்து பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளித்து வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், அணுஉலை செயல்பாட்டிற்கு வருமுன், பேரிடர் மேலாண்மை விதிமுறைகள் அனைத்தும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம், கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசத்தையும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post