Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆஸ்திரேலியாவின் வடபகுதியில் சூரிய கிரகணம் தெரிந்தது

வானியல் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் தரும் விதமாக இன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வந்தன.

இதனால் ஏற்படும் சூரிய கிரகணம் ஆஸ்திரேலியாவின் வடபகுதியில் தெளிவாக தெரிந்தது. அந்நாட்டின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், சுற்றுலாவாசிகள் மற்றும் வானியல் நிபுணர்கள் ஆகியோர் இந்த கிரகணத்தை காண ஆவலுடன் கூடியிருந்தனர்.

கிரகணம் ஆரம்பித்த உடன் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து பார்வையாளர்களை சற்று நேரம் திகைக்க செய்தது. பின்னர் கிரகணம் மறைந்தவுடன் மேகங்கள் சூழ்ந்து கொண்டன. அது இருள் போர்த்தியதை தொடர்ந்து நீடிக்க செய்தது.

இந்த கிரகணம் ஆஸ்திரேலியாவின் வடபகுதியில் 150 கி.மீட்டர் வரை பரவி கிடந்தது. மேலும், கிழக்கு இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியின் சில இடங்களிலும், நியூசிலாந்து, பப்புவா நியூகினியா மற்றும் சிலி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் தென் பகுதியிலும் தெரிந்தது.

ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக 2 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் நீடித்தது. அடுத்த சூரிய கிரகணம் வருகிற 2015ம் ஆண்டு மார்ச் வரை நிகழாது என வானியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post