Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித்.


விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 60 விழுக்காடுகள் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புக்கள் நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து சுமார் 50 நாட்கள் வரை படமாக்கப்படவுள்ளன.

இதேநேரத்தில் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார் அஜித்.இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் படத்திற்க்கான படப்பிடிப்புக்கள் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதாவது டிசம்பர் மாதத்தில் இருந்து விஷ்ணுவர்தனின் இயக்கத்திலும் சிவாவின் இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.இதேபோல் கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் ஒரே நேரத்தில் நடித்த படங்களாக "பரமசிவம்"."திருப்பதி" மற்றும் "வரலாறு"ஆகிய படங்கள் அமைந்திருந்தன.

[vuukle-powerbar-top]

Recent Post