Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆப்கானிஸ்தானுடன் இந்தியா நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்து

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையே  நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கடந்த சனிக்கிழமை இந்தியா வந்த ஆப்கன் அதிபர் கர்சாய் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்துப் பேசினார்.முன்னதாக அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன் பின்னர் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் ஆகியோர் முன்னிலையில் உரங்கள், கனிமச் சுரங்கம், இளைஞர் மேம்பாடு மற்றும் சிறிய அளவிலான திட்டங்கள் ஆகிய 4 துறைகள் தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். இருநாடுகளுக்கு இடையிலான உறவு சிறப்பாக உள்ளதாகவும் இது மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் இந்திய உதவியுடன் பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும தங்கள் நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்கள் முன்வர வேண்டும் என்றும் ஹமீத் கர்சாய் வேண்டுகோள் விடுத்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post