Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெகு விரைவில் ராஜபக்ச ஆட்சி கலையும் – ரவி கருணா நாயக்கா


ராஜபக்சவின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றது இந்த ஆட்சி என்னும் சில காலங்கள் தான் இது வெகு விரைவில் அழிந்து போகும் மக்கள் இந்த ஆட்சியை வேகமாக கவிழ்த்து விடுவார்கள் என்று கூறி இருக்கிறார் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரவி கருணா நாயக்க அதாவது 
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க தானே ஆட்சியில் நீடித்து நிலைப்பேன் என்ற மமதையுடன் பேசினார். ஆனால் எதிர்பாராத நேரத்தில் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதே போன்றுதான் இந்த அரசும் அதி விரைவில் கவிழும்” என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க கூறினார்.
நாடாளுமன்றம் நேற்று சனிக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம்  நடைபெற்றது.
ரவி கருணாநாயக்க விவாதத்தை ஆரம்பித்து பேசும் போது மேலும் கூறியதாவது:
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டம் சினிமாபடம் பார்ப்பது போன்ற மாயையை ஏற்படுத்தி உள்ளது. மூன்று மணி நேரத்தில் படம் முடிந்த பின் அங்கு எதுவுமே இருக்காது. அப்படித் தான் இந்த வரவு செலவுத் திட்டமும்.
12 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதாக போக்கு காட்டி உள்ள ஜனாதிபதி 70 லட்சம் தனியார் துறை ஊழியர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூடக்  கூறவில்லை. தனியார் துறையினரே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டிக் காக்கின்றனர் என்பதை மறந்துவிட்டனர்.
பொது மக்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் இல்லை. மாறாக சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பத்து ரூபாவை கொடுத்துவிட்டு 90 ரூபாவைத் தட்டிப்பறித்துள்ளது. முன்பு முப்பது ரூபாக இருந்த தண்ணீர் கட்டணம் 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 78 வீத அதிகரிப்பாகும்.
வெளிநாட்டு முதலீடுகள் என்ற பெயரில் பல ஒப்பந்தங்கள் முறையற்ற வகையில் செய்துகொள்ளப்பட்டுள்ளன. மதிப்பீடுகள் குறைக்கப்பட்டு நேர்மையற்ற வகையில் நியமித்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் நாம் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும்.
“திவிநெகும’ சட்டவரைவு நடைமுறைக்கு வந்தால் எதிர்க்கட்சி அழித்துவிடும் என்று அரச தரப்பில் கூறுகின்றனர். தாமே ஆட்சியில் நிரந்தரமாக இருக்கப்போகின்றோம் என்று கருதுகின்றனர். இப்படித்தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் இறுமாப்புடன் பேசினார்.
அவருக்குத் தெரியாமலே அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதி விரைவில் இந்த அரசுக்கும் அந்த நிலை ஏற்படும். நாடெங்கிலும் 666க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆடைத் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்குக் கூடுதலான வேலை, குறைந்த சம்பளம் என்பதே வீழ்ச்சிக்கான காரணம்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் கமரனும் மியான்மாருக்கு முதலீட்டாளர்களுடன் செல்கின்றனர். அப்படி இங்கும் முதலீட்டாளர்கள் வர வேண்டும். அரசுகள் மாறலாம். ஆனால் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் இருக்கக் கூடாது என்றார்.

[vuukle-powerbar-top]

Recent Post