Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தருமபுரியில் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் புனியா ஆய்வு

தர்மபுரியில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் புனியா இன்று அப்பகுதியில் ஆய்வு செய்தார்.

சில நாட்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்துத் திருணம் செய்து கொண்டதை அடுத்து கடந்த புதன் கிழமை இந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது.இந்த கலவரத்தில் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரின் வீடுகள் மற்றும் உடமைகளை சேதப்படுத்தினர்.இருநூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன ஓட்டுவீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன மேலும் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

இதனால் வீடுகளை இழந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உடமைகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டதை அடுத்து மாற்று உடைக்கும் வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.இதனையடுத்து கலவரம் பாதித்த பகுதிகளை தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் புனியா ஆய்வு செய்து வருகிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post