Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி சேதுக்குவாய்த்தானில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் மோகன் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் முன்னிலை வகித்தார்.

சுகாதார ஆய்வாளர் தேவ திரவியம் வரவேற்றுப் பேசினார். டாக்டர் ரேகா டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

பேரணியில் துணை தலைவர் கியூபர்ட், உறுப்பினர்கள், செவிலியர்கள், சவேரியார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெசிந்தா, ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், சுகாதார ஆய்வாளர் இளங்கோ நன்றி கூறினார்.

குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மணப்பாடு கிராமத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரநாராயணன் பேரணியை தொடங்கி வைத்தார்.

புனித வளன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோகர், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வேலாண்டி, குலசேகரன்பட்டினம் மருத்துவ அலுவலர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர்கள் ஜான்ராஜா, விஜயரம்பிகை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புனித வளன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டெங்கு ஒழிப்பு கோஷங்களை வீதி, வீதியாக எழுப்பி சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.
[vuukle-powerbar-top]

Recent Post