Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவுடனான இராஜதந்திர உறவு – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் பீரிஸ்

இந்தியாவுடனான இராஜதந்திர தொடர்புகளை இலங்கை இழந்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார். 

மேற்குநாடுகள் மற்றும் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை இலங்கை முறித்துக் கொள்வதால், பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என்று
இலங்கையின் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சுமத்திய குற்றசாட்டுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று பதிலளித்துப் பேசிய அவர், 

“கடந்த ஆறு மாதங்களில் இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஆறு பேர் இலங்கைக்கு வந்துள்ளனர். 

இந்திய உபகண்டத்துடனான இராஜதந்திரத் தொடர்புகள் இன்னும் வலுவாக உள்ளதை இது உறுதிப்படுத்துகிறது. 

இந்தியாவுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகள் மிகவும் பலமாகவே உள்ளன. 

இந்தியாவும் கூட இலங்கை உடனான உறவுகளில் கவனமாக உள்ளது. 

இருநாடுகளும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. 

அதேவேளை, ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை விரிவுபடுத்திக் கொள்வதில் இலங்கை ஆர்வம் காட்டிவருகிறது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post