Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி பிரச்னை: இருமாநில முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தை தோல்வி

காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டருடன், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூரில் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

தமிழகத்திற்கு சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால், கர்நாடகம் நிலுவையில் வைத்துள்ள 52. 8 டி எம் சி நீரை அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா, கூட்டத்தில் வலியுறுத்தினார்.

ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட திறக்க முடியாது என்று கர்நாடகா கை விரித்து விட்டது. தற்போது கர்நாடகத்திடம் 37 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், அந்த நீர் கர்நாடகத்தின் தேவைகளுக்கே போதாது என்றும் கர்நாடக முதலமைச்சர் தெரிவித்தார்.

இதனையடுத்து, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி நடைபெற்ற இரு மாநில முதலமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில், காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post