Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தென் தமிழகத்தில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை வங்கக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத் தாழ்வு நிலை வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாறியது. தற்போது இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது மாறியுள்ளது. இதனால் புயல் அபாயம் தற்போதைக்கு நீங்கியுள்ளது. சென்னைக்கு வடகிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் மையம்கொண்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த மண்டலத்தால் தென் தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதியில் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post