Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரையில் வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலி

மதுரை மேலூரில் வைரஸ் காய்ச்சலின் பாதிப்பால் மேலும் ஒரு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மேலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்த பூமா என்னும் அந்த சிறுமி கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையி்ல அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சிறுமி உயிரிழந்தார்.

மேலும் மேலூர் பகுதியில் மட்டும் கடந்த 31 நாட்களில் வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post