Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெலிக்கடையில் உள்ள ஆயுள், மரணதண்டனைக் கைதிகள் மட்டக்களப்புக்கு மாற்றப்படவுள்ளனர்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள மரணதண்டனைக் கைதிகளையும், ஆயுள்தண்டனைக் கைதிகளையும், மட்டக்களப்பில் உள்ள தனியான தீவு ஒன்றுக்கு மாற்ற இலங்கையின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. 

மட்டக்களப்பு வாவியில் அமைந்துள்ள மாந்தீவுக்கே முதல் கட்டமாக 1000 மரணதண்டனை, ஆயுள்தண்டனைக் கைதிகள் மாற்றப்படவுள்ளனர். 

மாந்தீவில் தொழுநோயாளர்களைப் பராமரிப்பதற்கான மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்குள்ள பெரும்பகுதி கட்டங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. 

இந்தக் கட்டடங்களை இலங்கை சுகாதார அமைச்சிடம் இருந்து பொறுப்பேற்கவுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, அங்கே மரணதண்டனை, ஆயுள்தண்டனைக் கைதிகளை அடைக்கவுள்ளது. 

முன்னதாக, போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகளை கற்பிட்டியில் உள்ள தீவு ஒன்றில் தடுத்து வைக்க திட்டமிடப்பட்ட போதும், போதிய கட்டட வசதிகள் இன்மையால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 

இவர்களையும் மாந்தீவில் தடுத்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக அங்குள்ள மூன்று விடுதிகள் உடனடியாகப் புனரமைக்கப்படவுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post