Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பென்னாகரம் அருகே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்

பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

இதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியின் வளாகத்தை வந்தடைந்தது.

ஊர்வலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதில் மருத்துவ அலுவலர் சத்தியநாராயணன், உமாமகேஷ்வரி, பிரதாப், மற்றும் கிராம செவிலியர்கள்,சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் மகேசன் செய்திருந்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post