Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக அரசே ! சிறப்பு முகாம்களை இழுத்து மூடுக - வேல்முருகன் வேண்டுகோள்



செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூட தமிழக அரசுக்கு வேண்டுகோள்! 

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு : 

தமிழகத்தின் செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி ஆகிய சிறப்பு தடுப்பு முகாம்களில் விசாரணை ஏதுமின்றி விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பது தொடர் கதையாக நடந்துவருகிறது. போர் நடைபெற்ற இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் கூட விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்ககக் கூடும் என்று சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் இன்னமும் செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி போன்ற தடுப்பு முகாம்களில் வாடிவருகின்றனர். 

ஈழத்து முள்வேலி முகாம்களைப் பற்றியும் தமிழகத்து திறந்த வெளி முகாம்களைப் பற்றியும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அக்கறை செலுத்துகிற அதே நேரத்தில் தமிழகத்தில் தடுப்பு முகாம் எனும் சிறைச் சாலைகளில் எந்தவித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களது நிலைமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது. 

எனவே, பூவிருந்தவல்லி மற்றும் செங்கல்பட்டு தடுப்பு முகாம்களை இழுத்து மூடி அங்கு அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை இதர அகதி முகாம்களுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்,
[vuukle-powerbar-top]

Recent Post