Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெலிக்கடை சிறையில் இந்திய கைதிகள் பத்திரமாக உள்ளனர் ~ சிறைத்துறை செயலாளர்

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று காலை அதிரடி படையினர் சோதனை மேற்கொண்டு போதைப் பொருட்களைக் கைப்பற்றியதற்கு சிறைக் கைதிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிரடி போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

இந்த மோதல் சிறைக் கைதிகளுக்கும் இலங்கை காவல்துறைக்கும் இடையே கலவரமாக மாறி, 27 சிறைக் கைதிகள் பலியானார்கள்.

இலங்கை போலீசார் உட்பட 50 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தக் கலவரத்தில் இந்திய கைதிகள் உட்பட வெளிநாட்டு கைதிகள் அனைவரும் இந்தத் தாக்குதலில் காயமடையாமல் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று சிறைத்துறை அமைச்சகத்தின் செயலாளர் எங்களுக்குத் தகவல் அளித்துள்ளார் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சரத் திசநாயகே இன்று கொழும்பில் நிருபர்களிடம் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post