Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருவண்ணாமலையில் தமிழ் மொழி பண்பாட்டு விழிப்புணர்வு பரப்புரை (படங்கள்)


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு  தமிழர் பண்பாடு நடுவமும் திருவண்ணாமலை தமிழ்ச் சங்கமும் இணைந்து தமிழ் மொழி பண்பாடு விழிப்புணர்வு முகாம் நடத்தினர். முதல் நாள் நிகழ்வில் குழந்தைளுக்கு திருக்குறள் , திருமுறை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் ஆர்முடம் கலந்து கொண்டனர் . கலந்து கொண்டு திருக்குறள் சொல்வதுடன் பொருள் விளக்கமும் சொல்லும் குழந்தைகள் சிறப்புப் பரிசுகளை அள்ளிச் சென்றனர் . பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்பு மற்றும் எழுது பொருட்கள் வழங்கப் பட்டது.

குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தூய தமிழ் சொற்கள் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி பலரையும் தூய தமிழில் பேசத் தூண்டியது. இவ்வாறன போட்டிகள் நிறைய நடத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தமிழ் சங்கத்தின் தலைவர் அருள்வேந்தன் , திரு இரா . மூர்த்தி, பாவலர் சேகர், புலவர் வையாபுரி, பாவலர் குப்பன் (திருக்குறள் தொண்டு மையம்), திரு பாபு இராதா கிருட்டிணன், மங்கலம் பிரபாகரன், புலவர் சாமிநாதன் (திருக்குறள் நெறி பரப்பு மையம்) ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பின்பு இரண்டாம் நாள் தீபத் திருநாளில் மலை சுற்றும் பாதையில் தமிழ் மொழியின் அவசியம் குறித்த ஏறத்தாள ஐயாயிரம் துண்டறிக்கை மக்களுக்கு வழங்கப்பட்டது . மலை சுற்றி வரும் தமிழர்கள் பலரும் இதை படித்துப் பார்த்து தமிழ் மொழியின் அவசியத்தை படித்துத் தெரிந்து கொண்டனர். பண்பாட்டு நடுவத்தின் தோழர்களும் திருவண்ணாமலை தமிழ் சங்கத்தின் தோழர்களும்  தூய தமிழில் பேசுமாறு பதாதை ஏந்தி வளம் வந்தது அனைவரையும் ஈர்த்தது .

பின்பு 'வாழ்க தமிழ்' , 'தமிழில் பேசுவோம் தமிழராய் இணைவோம்' என்ற பசை ஒட்டிகளை திருவண்ணாமலை தானிகள்(ஆட்டோ) அனைத்திலும் ஒட்டப்பட்டது . திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நின்ற அனைத்து பேருந்துகளிலும் பசை ஓட்டிகளை நடத்துனரும் ஓட்டுனர்களும் வாங்கி அவர்கள் பேருந்துகளில் ஒட்டி மகிழ்ந்தனர். 25 லட்சம் மக்கள் கார்த்திகை தீப விழாவில் கலந்து கொண்டனர். இந்த பரப்புரை மூலம்  பத்தாயிரம் மக்களிடம் நேரடியாக தமிழ் மொழி விழிப்புணர்வு செய்யப்பட்டது . மறைமுகமாக ஒரு லட்சம் மக்களுக்கு இந்த பரப்புரை விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகை அல்ல .





































































































[vuukle-powerbar-top]

Recent Post