Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஐக்கிய நாடுகள் சபைக்கு ராமதாஸ் கண்டனம்

இலங்கையில் இடம்பெற்ற போர்குற்ற விசாரணையினை ஐக்கிய நாடுகள் சபை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ள இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு ராமதாஸ் பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை விகாரத்தில் செய்த பாவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிகாரம் தேடவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மீது போர்குற்ற விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபை ஆணையிட ராமதாஸ் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை கண்ணை மூடிக்கொண்டிருந்தது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தவறுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் தமிழீழம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post