Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருவண்ணாமலையில் கார்த்திகைதீபத்தை முன்னிட்டு கொண்டுவரப்பட்டுள்ள ஆளில்லாத குட்டிவிமானம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க கொண்டுவரப்பட்டுள்ள ஆளில்லாத குட்டி விமா னம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகைதீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடக் கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதீபம் வருகிற 27ந் தேதி ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை காண சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

இதனால் ஏற்படும் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரி சலை கண்டறிந்து உடனுக் குடன் சரிசெய்ய ஆள்இல்லாத குட்டி விமானம் மூலம் கண் காணிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இதற்காக சென்னை அண்ணாபல்கலைக்கழக விமான வான் மின்னணுவியல் துறை சார்பில் பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில் செய்யப்பட்ட ஆளில்லாத குட்டி விமானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

2 கிலோ 300 கிராம் எடை யுள்ள இந்த ஆளில்லாத விமானத்தின் அடிப் பகுதியில் வீடியோ கேமரா இணைக் கப்பட்டுள்ளது. 200 முதல் 900 அடிவரை பறக்கும் சக்தி வாய்ந்தது.

தொடர்ந்து 35 நிமிடம் பறக்கும் வகையில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஒரேநேரத்தில் பறக்கிறது. மகாதீபத்தன்று இந்த ஆளில் லாத குட்டி விமானத்தை பறக்கவிட்டு கூட்டத்தை கண்காணிக்க திட்டமிட்டுள் ளனர்.

இதற்காக கொண்டுவரப் பட்டுள்ள ஆளில்லாத குட்டி விமானம் நேற்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணப்பன், வேலூர் சரக டி.ஐ.ஜி. கணேச மூர்த்தி ஆகியோர் முன்னி லையில் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது.

நேற்று சுமார் 220 அடிவரை பறந்து சென்றது. இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப் படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post