Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குஜராத் தேர்தல் களத்தில் புயலைக் கிளப்பி விட்டுள்ள வன்னிப்போர் அவல ஒளிப்படம்

இந்தியாவின் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில், வன்னிப் போரின் போது எடுக்கப்பட்ட படத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியுள்ள விவகாரம் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளதை சுட்டிக்காட்டும் தேர்தல் விளம்பரம் ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 

அந்த விளம்பரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றின் ஒளிப்படம், இறுதிக்கட்டப் போரின்போது வன்னியில் எடுக்கப்பட்டதாகும். 

அந்தப் படம் இலங்கையின் அகதிமுகாம் ஒன்றில் ஐ.நா படப்பிடிப்பாளரால் எடுக்கப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. 

இந்தப் படம் தொடர்பான சர்ச்சை தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையத்தில் கருத்துகள் பரவி வருகின்றன. 

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, அந்தப் படத்தை விமர்சிக்காமல், தமது புள்ளிவிபரங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post