Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை அதிபர் ராஜபக்ச அமெரிக்காவுக்கு இரகசியப் பயணம்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 

மூன்று நாள் பயணமாக கசகஸ்தான் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, அங்கிருந்தே அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

ஏற்கனவே அறிவிக்கப்படாத, இந்தத் திடீர் பயணத்துக்கான காரணம் என்னவென்று அறிவிக்கப்படவில்லை. 

எனினும் இது தனிப்பட்ட பயணமே என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன்போது, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் இலங்கை பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவையும் மகிந்த ராஜபக்ச சென்று பார்வையிடவுள்ளார். 

சுமார் ஒருவாரம் வரை மகிந்த ராஜபக்ச அமெரிக்காவில் தங்கிருப்பார் என்று கூறப்படுகிறது. 

எனினும் இலங்கை அதிபரின் பயண நிகழ்ச்சி நிரல் முற்றிலும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. 

புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்களைக் கருத்தில் கொண்டே, மகிந்த ராஜபக்சவின் பயணம் குறித்த தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post