Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதல்லமைச்சர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து


முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

வாழ்த்து

தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை உவகையுடனும் உற்சாகத்துடனும் அனைத்து மக்களும் கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தித்திக்கும் இத்தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்தி, அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கவர்னர் ரோசய்யா

தமிழக கவர்னர் ரோசைய்யா விடுத்துள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், மகிழ்ச்சிகரமான இந்த தீபாவளி திருநாளில் தமிழக மக்களுக்கு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு இதய பூர்வமான வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபத் திருநாள், நமக்கு அதிகமான அறிவாற்றலையும் வழங்கி, வளர்ச்சி மற்றும் மேன்மையை அளிக்கட்டும். அறியாமை எனும் இருள் அகற்றி ஒற்றுமை அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்தி, நமது நாட்டை உச்சத்துக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும். இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட் டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post