Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது முழுமையான அமைதி ~ ஜெயலலிதா

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சில வன்முறை சம்பவங்கள் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது,

ராமநாதபுரம் மாவட்டத்தில், தென்மண்டல காவல் துறை தலைவர் தலைமையில், 2 காவல் துறை துணை தலைவர்கள், 18 காவல் கண்காணிப்பாளர்கள், 15 தமிழ்நாடு சிறப்பு காவல் படை நிறுமங்கள் உட்பட 6,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கூடுதல் காவல் துறை இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு) பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருகிறார்.

அப்பகுதி முழுவதும் தற்போது அமைதி நிலவுகிறது என்பதை சபைஉறுப்பினர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

எனவே, தென்மாவட்டங்களில் சாதி கலவரங்கள் பரவி கொண்டிருக்கின்றன என்பன போன்ற வாசகங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அன்பு கூர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். அந்த மாவட்டங்களில், குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது முழுமையாக அமைதி நிலவுகிறது என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post