Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விற்கப்பட்ட ரங்கா மற்றும் பில்லா.


பாண்டிராஜ் இயக்கும் "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்தின் உரிமையை "ஸ்டுடியோ கிரீன்" பட நிறுவனம் பெற்றுள்ளது.இப்படமானது 2013 இன் ஆரம்பத்தில் திரைக்கு வரும் என தெரிகிறது.

இப்படத்தில் விமல் மற்றும் சிவ கார்த்திகேயன் ஆகியோர் நாயகர்களாகவும் பிந்து மாதவி மற்றும் ரெஜினா ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துக் கொண்டுள்ளனர்.இப்படத்திற்கான இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

முழுக்க முழுக்க திருச்சியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதையானது நகைச்சுவை கலந்த காதல் இரசனையோடு வெளிவரவுள்ளது.பாண்டிராஜ் இயக்கம் படங்கள் என்றாலே குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் அதேபோல் இப்படமும் ஏனைய அவருடைய படங்கள் போலவே குடும்பத்தினரோடு சென்று பார்க்கும் விதத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தை மெருகூட்ட பரோட்டா சூரி மற்றும் தம்பி ராமையா ஆகியோரும் நடித்துள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post