Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றும் வேலை நிறுத்தம்

இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஓராண்டு காலமாக இலங்கைச் சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்க அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், இன்றைய தினத்தைக் கறுப்பு தினமாக அறிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, பலர் வேலையிழந்துள்ள நிலையில் 5 கோடி ரூபாய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post