Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி விவகாரம் - தமிழக அரசு மீண்டும் மனு

காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளது.

காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் இந்தாண்டு இதுவரை வழங்கப்பட வேண்டிய 52 புள்ளி எட்டு டிஎம்சி தண்ணீரை வழங்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக கண்காணிப்புக்குழுவே முடிவு செய்யலாம் என கூறப்பட்டபோதிலும் நிலுவையிலுள்ள தண்ணீரைப் பெறுவது குறித்து அந்த குழு உத்தரவு பிறப்பிக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்தாண்டு பிப்ரவரி வரை சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவை என கூறியுள்ள தமிழக அரசு, மேட்டூர் உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசின் இந்த புதிய மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post