Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடுதல் மின்சாரம் வழங்கக் கோரி தமிழக அரசின் வழக்கு இன்று விசாரணை

மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை இன்றும் மீண்டும் நடைபெற உள்ளது.

டெல்லி அரசு திரும்ப ஒப்படைத்த 1,700 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும், தெற்கு பகுதிகளுக்கான மின் விநியோக சேவையை சரி செய்ய வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபிர் தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 8 ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.

அப்போது டெல்லி அரசு திரும்ப ஒப்படைத்த மின்சாரத்தை வேறு மாநிலத்திற்கு வழங்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டார். டெல்லி மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு செல்லும் அளவுக்கு மின் பாதை வசதி இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து , தென் மண்டல மின்பாதையின் திறனை ஆய்வு செய்து, நவம்பர் 29 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி மத்திய மின்சார ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post