Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நீலம் புயலை தொடர்ந்து மீண்டும் புதிய புயல்

வங்க கடலில் உருவான காற்றழுத்தம் தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே 1000 கிலோமீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 650 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் வட தமிழகம் மற்றும் தென் ஆந்திராவை நோக்கி நகரும் என்று கூறியுள்ளது. மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதன் காரணாமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலம் புயலை தொடர்ந்து புதிய புயல் சின்னம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் ஆந்திரவில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு அனைத்து துறைமுகங்களிலும் ஏற்றப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post