Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆறுதலாகப் பேசப் போகிறராம் – ராஜபக்சவின் ஒளிப்பட இராஜதந்திரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆறுதலாக பேசப் போவதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். 

நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் 2013ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்த இலங்கை அதிபர், பின்னர் அங்கு தேநீர் விருந்தில் பங்கேற்றார். 

தேநீர் விருந்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், பொன்.செல்வராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பீலிக்ஸ் பெரேராவுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, இலங்கை திபர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்று அவர்களுடன் உரையாடியுள்ளார். 

நீதித்துறை விவகாரங்கள் குறித்து அவர்களுடன் பேசிய மகிந்த ராஜபக்ச, “உங்களுடன் ஆறுதலாக பேசவேண்டும். ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். 

எனினும் என்ன விடயம் தொடர்பாக பேசவேண்டும் என்று அவர் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்துள்ளார். 

குறுகிய நேரம் நடந்த இந்தச் சந்திப்பை அங்கிருந்து எல்லா ஒளிப்படப் பிடிப்பாளர்களும் பதிவு செய்து கொண்டனர். 

இலங்கையின் இன்றைய அனைத்து நாளிதழ்களிலும் இந்தச் சந்திப்பு ஒளிப்படமே முகப்பில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post