Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் "வை திஸ் கொலவெறி டி" பாடல்.


அனிருத் இசையில் தனுஷ் பாடிய "வை திஸ் கொல வெறி டி " பாடலானது "சோனி" இசை நிறுவனத்தினரால் இணையம் வாயிலாக வெளியிடப்பட்ட முதலாவது ஆண்டு இன்று.இந்த காணொளியில் இருந்த அனிருத், தனுஷ், ஸ்ருதி  ஹாசன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கடந்த வருடங்களில் மிக பிரபலமாக  பேசப்பட்டனர்.இன்றுவரை இக்காணொளியை உலகம் முழுவதிலும்  இருந்து சுமார் 64 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

இப்பாடலானது 2012 இல் வெளிவந்த "3 " படத்தில் இடம்பெற்றிருந்தது, முதலாவது  ஆண்டைக் கொண்டாடும் "வை திஸ் கொல வெறி டி " பாடல் குறித்து கருத்து தெரிவித்த தனுஷ், இப்பாடலை மிக பெரியளவில் வெற்றியடைய செய்த ஊடகங்கள், தன்னுடைய இரசிகர்கள்,மற்றும் இக் காணொளியை பார்த்த அனைத்து  பார்வையாளர்களுக்கும் இவ்வேளையில் தன்னுடைய நன்றியை தெரிவிப்பதாக கூறியிருந்தார்.இப்பாடலின் வெற்றியை இப்போது நினைத்தாலும் கனவாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.



[vuukle-powerbar-top]

Recent Post