Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை – புதிய சட்டம் கொண்டுவர முயற்சி

சிறார்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவோர் மற்றும் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவோருக்கு மரணதண்டனை விதிக்கும் சட்டத்தைக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

இலங்கையின் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, இத்தகைய பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனையை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். 

சிறார்களும் பெண்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையிலேயே, இந்தக் குற்றச்செயல்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையில் தற்போது பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு இலங்கையில் 1450 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும், 1169 சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post