Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய அரசு கொண்டு வரும் லோக்பால் சட்டத்தை குப்பை தொட்டியில் போட வேண்டும்: அன்னா ஹசாரே

வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வரும் லோக்பால் சட்டத்தை குப்பை தொட்டியில் போடுவதற்கு மட்டுமே தகுதியானதாக இருக்கும் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என்று போராடி வரும் அன்னா ஹசாரே, மத்திய அரசு தயாரித்துள்ள லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த பயனும் இல்லை. மத்திய அரசின் சட்டம் ஊழலை ஒழிக்க பயன்படாது.

மத்திய அரசின் லோக்பால் சட்டம் குப்பை தொட்டியில் போட மட்டுமே தகுதியானதாக இருக்கும்.

நாங்கள் தயாரித்துள்ள லோக்பாலை சட்டமாக நிறைவேற்றும் வரை, எங்கள் இயக்கத்தில் லோக்பால் சட்டத்தை கொண்டு வர தொடர்ந்து போராடுவோம் என்று ஊழலுக்கு எதிரான இயக்கத்தை நடத்தி வரும் அன்னா ஹசாரே இன்று புதுடெல்லியில் நிருபர்களிடம் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post