Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கோவை மத்திய சிறையில் ஆய்வு : கைபேசி, கத்தி பறிமுதல்

கோவை மத்திய சிறைச்சாலையில் காவல்துறையினர் இன்று மேற்கொண்ட திடீர் ஆய்வில் கைபேசி, கத்தி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

காவல்துறை துணை ஆணையர் சுவாமிநாதன் தலைமையில் 2 உதவி ஆணையர்கள் உட்பட 50 காவல்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். மத்திய சிறைச்சாலையின் 5 பிளாக்குகள் மற்றும் பெண்கள் சிறைச்சாலையை காவல்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். 

காலை 5 மணிக்கு துவங்கிய சோதனை 5 மணி நேரமாக நீடித்தது. சோதனையின் முடிவில் 13 கத்தி, 3 கைபேசி , 6 கைபேசி  சார்ஜர்கள் உள்ளிட்ட பொருட்களும், 6 ஆயிரத்து 700 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
[vuukle-powerbar-top]

Recent Post