Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இருமுறை மணம் முடித்தவரை மீண்டும் மணக்கும் வித்யா பாலன்.


"டேர்டி பிக்சர்" மற்றும் "கஹானி" போன்ற வெற்றிப் படங்களில் நடித்த தமிழ் பெண்ணான வித்யா பாலனுக்கும், "யு.டி.வி" நிர்வாக இயக்குனரான சித்தார் ரோய் கபூருக்குமான திருமணம் வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட சுமார் ஒரு வருட காலமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போதுதான் தங்கள் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

வித்யா பாலன் தமிழ் பெண்ணாக இருப்பதாலும், சித்தார்த் ரோய் பஞ்சாபி இனத்தை சேர்ந்தவர் என்பதாலும் இவர்கள் இருவரது திருமண நிகழ்வுகள் தமிழ் பஞ்சாபி கலாச்சார முறைப்படி நடைபெறவுள்ளது.

டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள சங்கீத் நிகழ்வில் வித்தியா பாலனின் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளனர்.திருமணம் முடிந்ததும்இவர்கள் இருவரும்  தங்கள் தேனிலவை கொண்டாட கரீபியன் தீவை நோக்கி பறக்கவுள்ளனர்

இதற்கிடையே, சித்தார்த் ரோய் கபூர் ஏற்கனவே இரு முறை திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனாலும் வித்யாவுக்கு இதுவே முதல் திருமணம்.

[vuukle-powerbar-top]

Recent Post